29-06-2020
சங்கத்தின் விதிமுறைகள்

சங்கத்தின் விதிமுறைகள்

1.இந்த குடும்பத்தில் இணைந்த தங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம்

2. இந்த சங்கம் தமிழ்நாடு சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவுபெற்ற சங்கமாகும்

3. இதன் பதிவு எண் 124/2010 மற்றும் இதன் தலைமையகம் மதுரை ஆகும்

 4. இந்த சங்கத்தில் ஏழு பேர் கொண்ட நிர்வாகத்தினர் நிர்வாகம் செய்து வருகின்றனர்
 
5. ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், ஒரு செயலாளர், ஒரு இணைச்செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு செயற்குழு உறுப்பினர் ஆவார்கள்
 
6. இந்த சங்கத்தில் உறுப்பினராக சேருவதற்கு இ-டிக்கெட் மற்றும் இ சேவை தொழில் செய்யக்கூடிய யாவரும் உறுப்பினராக முடியும்
 
7. இதில் உறுப்பினராக சேர்வதற்கு வருட சந்தாவாக ரூபாய் 500 வசூலிக்கப்படும்
 
8. ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 31 வரை ஒரு வருட ஆண்டாக செயல்பட்டு வரும்
 
9. இந்த சங்கம் ஜாதி மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டது
 
10. ஒருவர் மற்றவருக்காக மற்றவர்கள் ஒருவருக்காக என்ற கொள்கையும்
 
11. பசித்தவருக்கு மீனை உணவாக கொடுப்பதைவிட மீன்பிடிக்க கற்றுக்கொடுக்கும் கொள்கை உடையது
 
12. இச்சங்கத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனியாக குரூப் உள்ளது அந்த குரூப்பில் அந்தத் தொழிலுக்கு சம்பந்தப்பட்ட கேள்வி மட்டும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை கேட்டு தெரிந்து கொள்ளலாம்

13. காலை வணக்கம் இரவு வணக்கம் பதிவிடுவது மற்றும் தேவையற்ற பதிவுகளை பதிவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது

14. தேவையற்ற பதிவுகளை பதிந்து மற்றவர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம்
 
15. தாங்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக இணைந்த பிறகு சங்கத்தின் சார்பாக தங்களுக்கு இலவச லாகின் ஐடி வாங்கி கொடுக்கப்படும் அதே நேரத்தில் தாங்கள் இச்சங்கத்தில் உறுப்பினராக தொடராத பட்சத்தில் சங்கத்தின் மூலமாக வாங்கிக்கொடுத்த அனைத்து லாகின் ஐடி ரத்து செய்யப்படும்
 
16. சங்கத்தின் கூட்டத்தில் பங்கு பெறாத உறுப்பினர்கள் அதேநேரத்தில் சங்கத்திற்கு எதிராக செயல்படும் உறுப்பினர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்படுவார்கள்

 

17. உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வருட சந்தா ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் அவ்வாறு செலுத்தப்படவில்லை என்றால் அவர்கள் உறுப்பினராக தொடர முடியாது என்பதை கணக்கில் கொண்டு அவர்களுக்கு சங்கத்தின் மூலமாக வழங்கிய அனைத்து லாகின் ஐடி ரத்து செய்யப்படும்

18. புதிய தொழில்களை சங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும் பொழுது அதன் காலக்கெடுவுக்குள் தாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்

19. சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு சோசியல் மீடியா டிவிட்டர், வாட்ஸ்அப், டெலிகிராம்,பேஸ்புக்,ஜூம் போன்ற ஐடி இருப்பது அவசியம்
 
 20. தங்களுக்கு ஏற்படும் தொழில்ரீதியான இடையூறுகள் நியாயமாகவும் அதே நேரத்தில் ஆதாரப்பூர்வமாக இருந்தால் சங்கம் அதுபற்றி சம்பந்தப்பட்ட துறைகளிடம் கோரிக்கை வைக்கும்
 
21. ஆதாரமற்ற மற்றும் அரசாங்க விதிமுறைகளை மீறும் எந்த செயலுக்கும் சங்கம் ஆதரவாக செயல்படாது
 
 22. ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணி முதல் 10.15 வரை வாட்ஸ்அப் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் தங்களுக்கு ஏற்படும் தொழில் ரீதியான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்
 
 23. மாதாந்திர மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முந்தைய  தீர்மானங்கள் வாசிக்கப்படும் அந்த நேரத்தில் தங்களுக்கு எழும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படும்
 
 24. வேறு ஏதும் தங்களுக்கு கேள்விகள் இருப்பின் கூட்டம் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் தங்களது கேள்வியே தெரியப்படுத்த வேண்டுகிறோம்

 

25.இந்த விதிமுறையை பின்பற்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட அன்புடன் வேண்டுகிறோம்

GoBack